Tuesday, May 9, 2017

3- அமர்நீதி நாயனார்



அமர்நீது நாயனார் சோழ நாட்டில் பழையாறை என்னும் பகுதியிலே பிறந்தார்.7ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தவர்

சிவபெருமானின் முன்பு தராசுத் தட்டில் தன் மனைவி, மகனுடன் ஏறி கோவணக்கள்வராக வந்த சிவ பெருமானின் முன்பு தன்னையே அர்ப்பணித்து சிவபதம் அடைந்தவர்

வணிகர் குலத்தில் பிறந்த இவர், வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினாலும், சிவனடியார்க்கு பணி புரிவதையே தன் தொண்டாகக் கொண்டிருந்தார்

சிவனடியார்க்கு உணவு, உடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய தொண்டுகளை செய்து வந்தார்.

திருநல்லூரில் மடம் கட்டி உணவு அளித்து வந்தார்.

அவருக்கு அருள் புரிய எண்ணிய சிவபெருமான், ஒருநாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலம் கொண்டார்.கையில் இரு கோவணம் முடிந்தத் தண்டுடன், கோவண ஆடையுடன் திருநல்லூரில் இருந்த மடத்தை அடைந்தார்

அவரைக் கண்டு மகிழ்ந்த அமர்நீதியார் அவரை உணவு உண்ண அழைத்தார்.

பிரம்மச்சாரியாரும் அதற்கு இசைந்து காவிரியில் நீராடச் சென்றார்.செல்லும் போது மழைவரினும் வரும் எனக் கூறித் தமது தண்டில் கட்டியிருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து, அதை ஜாக்கிரதையுடன் வைத்திருக்குமாறு கூறிச் சென்றார்.அமர்நீதியார், அதனைத் தனியாக ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்தார்

சிவனடியார், கோவணத்தை மறையும்படி செய்து, மழையில் நனைந்தவராய் வந்தார்.வைத்திருந்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.ஆனால், வைத்த இடத்தில் இல்லாது எங்கு தேடியும் அதைக் காணாது அமர்நீதியார் திகைத்தார்.

வேறு புதிதாக ஒன்றை எடுத்து வந்து, கொடுத்து சிவனடியாரிடம் நடந்ததைக் கூறினார்

அதனைக் கேட்ட சிவனடியார் , கோபமுற்று, "நான் உமக்குக் கொடுத்த கோவணத்திற்கு ஒத்தது இத்த்ண்டில் உள்ளது.அதற்கு எடைக்கு எடை கோவணம் கொடுப்பீராகா" என்றார்

தராசுத் தட்டில் ஒன்றில் , அடிகளார் கொடுத்த கோவணத்தை வைத்து, தன்னால் நையப்பட்ட கோவணங்களை மறு தட்டில் அமர்நீதியார் வைத்தார்.ஆனால், எவ்வளவு வைத்தும் இவரது தட்டு தாழவில்லை.பின், அமநீதியார், தன்னிடம் இருந்த பொன், வெள்ளி ஆகியவற்ரை வைத்தார்.

தட்டு தாழவில்லை

பின் மனைவையையும் புதல்வனையும் தட்டில் வைத்தார்.பயனில்லை.

பின், ":நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் எனில், இத்தட்டு சமமாக நிற்பதாக" என்று ஐந்தெழுத்து ஓதித் தாமும் அதில் அமர்ந்தார்.

இப்போது தராசுத் தட்டுக்கள் ..இரண்டும் சமமாயின

அடியாராக வந்த இறையர், திருநல்லூரில் அம்மையப்பராகிய திருக்கோலத்தை நாயனாருக்குக் காட்டி..மனைவி, மைந்தர் ஆகியோருடன் சிவலோக வாழ்வை அளித்தனர்

வேதப் பொருளான சிவனும், சிவனடியார்களும் ஒரே நிறை என்பதை அமர்நீதி முளம் உலகத்திற்குக் காட்டினார் இறைவன்

அமர்நீதியார் குரு பூசை நாள் ஆனி பூரம்
அவரது முக்தித்தலம் திருனல்லூர் 

Saturday, May 6, 2017

2- அப்பூதி அடிகள்

திருநாவுக்கரசரின் சிவத்தொண்டைனை அறிந்த அப்பூதி அடிகள். சோழ நாட்டில் திங்களூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார்.

திருநாவுக்கரசரின் பெயரால், மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்து வந்தார்.

ஒரு முறை, திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் வசித்த ஊருக்குச் சென்ற போது, அங்கு தனது பெயரால் தர்மங்கள் நடப்பது கண்டு வியந்தார்

பின், அப்பூதி அடிகள் பற்றிக் கேள்விப் பட்டு அவர் இல்லம் சென்றார்

அப்பூதி அடிகளைப் பார்த்து,  "ஏன் உங்கள் பெயரில் செய்யாமல், திருநாவுக்கரசர் பெயரில் செய்கிறீர்கள்?" எனக் கேட்டார்

அதற்கு அடிகள், திருநாவுக்கரசர், சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், பின், சிவன் அருளால் அச்சமயம் விட்டு வந்து, சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும், மேலும், இறைவன் மீது அன்பு கொள்வதை விட, அவரது அடியார்கள் மீது அன்பு கொள்ளுதல் சிறப்பானது என்றும் எடுத்துரைத்தார்

அதன் பின், திருநாவுக்கரசர் தானே என அப்பூதி அடிகளிடம் நாவுக்கரசர் கூற, தன் இல்லம் தேடி அவர் வந்ததற்காக மகிழ்ந்த அடிகள் உணவு உண்ண அவரை அழைத்தார்

வாழை  இலையை அறுக்கச் சென்ற அடிகளின் மகன் பாம்பு தீண்டி இறந்தான்.திருநாவுக்கரசர் வந்துள்ள போது மகன் இறந்ததால், அது தெரிந்தால், அவர் உணவு உண்ண மாட்டாரே! என்ற எண்னத்தில். மகன் மறைந்ததை மறைத்து அடிகளும், அவரது மனைவியும் சாப்பிட நாவுக்கரசரை அழைத்தனர்

ஆனால், திரு நாவுக்கரசர் தன்னுடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவருந்த அழைத்து வரச் சொன்னார்

வேறு வழியின்றி, மகன் இறந்த விஷயத்தை அடிகள் கூற...இவையனைத்தும் இறைவனின் திருவிளையாடலே என பாடல் பாடி இறந்த மகனை உயிர்ப்பித்தார் நாவுக்கரசர்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் , முதல் நான்கு நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்த திருநாவுக்கரசர் வாழ்ந்த  7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அப்பூதி அடிகள்

இவர் அவதரித்தத் தலமும், முக்தி அடைந்தத் தலமும் திங்களூர் ஆகும்